காதல் வலி - 72

அன்பே
நான் உன் பின்னால்
சுற்றும்போதெல்லாம்
நீ என்னைப்
போடா பொருக்கி
செருப்புப் பிஞ்சுவிடும்
போய்விடு
என்றுதான் திட்டுகின்றாய்
ஆனால் அது என் காதிலோ
நாதா பொறு
சிறு பூ பிஞ்சு விடும்
காத்திடு
என்று தேனாய்க் கொட்டுகின்றது