தமிழ் மன்னர்கள்
தமிழ் மண்ணை ஆளும்
அரியணையில் ஏறும்
மன்னரது புகழை
புலவர் பலர் பாட வேண்டும்......
வாழ்தாலும் மாண்டாலும் அவனது புகழே
உலகம் திரும்ப படிக்க வேண்டும்.....
வரலாறு என்று எழுதுகிற முன்னே...
வாழ்ந்த இனம் நாம் அல்லவா....
மதில் புடுச்சு உலகம் பார்க்க
திமில் புடுச்சது தமிழன் வீரம் அல்லவா.....
சங்கம் வைத்து காத்த மண்ணில் நம் மொழி சாகல...
மூவேந்தர் ஆட்சி செஞ்ச மண்ணில் வீரம் இன்னும் குறையல
ரத்தம் சிந்தி வீரம் வெளஞ்ச மண்ண எவனும் நெருங்கல
நெஞ்சிலே துணிவோட எவனும் எட்டி பாக்கல....
தந்திரத்தால் ஆட்சி செஞ்ச வெள்ளையனும் தேவல
வஞ்சகத்தால் ஏமாறும் நிலைமை ஏன் மன்னா புரியல...
தமிழன் அரியணையில் மன்னா உன் உறக்கம் ஏன் களையல....
மக்கள் குறை கேட்க மொழியா உனக்கு புரியல....
நகர் வலம் வந்த மன்னன் கதையுமா உனக்கு தெரியல...
கைகட்டி நீக்கும் இனமா? நாமென்று....
உனக்கு எனோ தெரியல.....
புரியாத பேச்சை போலி சிரிப்பை
தெரியாமல் நீ ஏன் கேட்கனும்...
கோடி கோடி இளைஞர் கூட்டம்
தேரிழுக்க தோள் காட்டுதே
தேரு செய்ய யோசனை கூட
என் மன்னா உனக்கு ஏன் தோணல...
பல தோள்கள் இங்கே ஆயுதமாய் இருக்கு
பல கல்வி இங்கே பலனின்றி கிடக்கு
பாலை நிலமா நம் முன்னோர் விட்டிங்கே சென்றார்...
பல தொழிலும் செய்யும் வசதி நம்மிடமே இருக்கு
பழம் பெருமை என்றும் மடியாமல் காக்க....