பெண்ணே உன் தேசம் உலகெங்கும் உன் வாசம்

சிறகற்ற சேயும் நீயே !
கருவுற்ற தாயும் நீயே !
இருள் சூழ்ந்த இரவில்
திரி தூண்டும் விரலும் நீயே !
இடர் சூழ்ந்த வாழ்வில்
யாழ் மீட்டும் இசையும் நீயே !
யாதுமாய் நீ உறைந்தாய்
உலகெங்கும் நீ நிறைந்தாய்.
பெண்ணே
நீ அற்ற வீடு
அது வேரற்ற காடு
பெண்ணே
நீ அற்ற தேசம்
அது காற்றற்ற சுவாசம்
பெண்ணே
உன் தேசம்
அது வனமெங்கும் மலராகும்
மலரெல்லாம் மனம் வீசும்
அதனால் உலகெங்கும் உன் வாசம்