Krish - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Krish
இடம்:  கடலூர்
பிறந்த தேதி :  14-Jun-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Dec-2017
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தேடலில் திளைத்த வாசகி....

என் படைப்புகள்
Krish செய்திகள்
Krish - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2019 12:52 pm

எந்திர தேகத்தின் முகவரி;
சிந்திய வியர்வையின் முதல் வரி.
உணர்வுகள் பேசிடும் இதன் வழி;
பேசாத மௌனத்தின் ஒரு மொழி.
உறவின் தொடக்கத்தின் வாசம்;
உயிர் உறக்கத்தின் சுவாசம்.
நிழலின் நிறங்களின் நேசம்;
நிஜத்தின் நிழலும் இதை பேசும்.
மொழியின் வழி எழும் விமர்சனம்;
உயிரின் வலி தரும் சமர்ப்பணம்.
இதுவே கவிதை
என் வழியில்......

மேலும்

Krish - Krish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2017 5:43 pm

விழியோடு விடை கேட்டு
விரைகின்ற நாட்களில்,
காற்றினில் கொடியாக
அசைந்திடும் நம் மனம்.
விதியோடு கை கோர்த்து
நொடிகளைக் கடக்கையில்,
சிறை பட்ட சிறகும்
கரை தொட்டு விரியும்.
கன்னியின் கண்களில் தோன்றிடும் அனலும்
உயிர் பறிக்கும் உன்னை எரித்து.
ஆண்களின் மௌனத்தில் புதை கொண்ட சிரிப்பும்
கழுத்தினில் பாம்பாய் உனைச் சுற்றி இருக்கும்.
கருவறை வாசம்
மறுமுறை காண்பாய்.
விஜயனாய் இருந்தும்
வேண்டி நீ தோற்பாய்.
நிஜம் அறியாமல்
கனவோடு கரைவாய்.
கண் திறந்தாலும்
இருளோடு உறைவாய்.
காதல் தந்த வல

மேலும்

காதல் என்ற சொல் உள்ளத்தை விடவும் கண்களின் கண்ணீரைத்தான் நேசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 9:49 pm
Krish - செல்விபிரியங்கா சண்முகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 11:10 am

எத்தனை எத்தனை மாற்றமடி
என்னுள் நித்தம் நிகழ்ந்திட காணுகின்றேன்
சத்தியம் கேளடி சின்ன பெண்ணே
என் சிந்தைக்குள் சிக்கிய வார்த்தைகளில்....

சித்திரை மாதத்தில் நெற்றியில் பூத்திட்ட
முத்து வியர்வை துளிகளினை
மார்கழி மாதத்தின் மத்திய குளிரில்
தேடுகிறேன் அதை காணவில்லை....

தேக்கிய தேன்களை திருடிடும் கூட்டத்தை
வியாபாரி என்றே நாம் சொல்லுவதால்
ஏமாளி கோமாளி தேனீக்கள் கூட்டம்
என்னென்று நம்மை சொல்லிடுமோ???

கட்டிய சேலையின் பட்டு ஜரிகைக்குள்
செத்திட்ட பூச்சிகள் எத்தனையோ????
சுடுகாட்டு சுவரென்றே சேலையை நான் சொன்னால்
என் சுற்றமும் நட்பும் ஏற்றிடுமோ????

பூ பந்தல் மேடையில் நானிருக்க
புத

மேலும்

சேலையை சுடுகாட்டுச்சுவர் என்று சொல்லும் உங்கள் வர்ணனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . மேலும் எழுத என் வாழ்த்துக்கள் . 16-Jan-2019 11:52 am
மிக்க நன்றி 23-Jan-2015 5:27 pm
மற்றம் அழகு தொடருங்க; 21-Jan-2015 2:43 pm
Krish - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2017 6:04 pm

சிறகற்ற சேயும் நீயே !
கருவுற்ற தாயும் நீயே !
இருள் சூழ்ந்த இரவில்
திரி தூண்டும் விரலும் நீயே !
இடர் சூழ்ந்த வாழ்வில்
யாழ் மீட்டும் இசையும் நீயே !
யாதுமாய் நீ உறைந்தாய்
உலகெங்கும் நீ நிறைந்தாய்.
பெண்ணே
நீ அற்ற வீடு
அது வேரற்ற காடு
பெண்ணே
நீ அற்ற தேசம்
அது காற்றற்ற சுவாசம்
பெண்ணே
உன் தேசம்
அது வனமெங்கும் மலராகும்
மலரெல்லாம் மனம் வீசும்
அதனால் உலகெங்கும் உன் வாசம்

மேலும்

Krish - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2017 5:45 pm

என்னை ஈன்றவளே !
நானும் உன்னைப் போன்றவளே !
வழியும் கண்ணீரில்
வலியின் காட்சிகளைப் பார்க்கின்றேன்.
உன்னோடு நான் கொண்ட பந்தம் ;
அது கண்ணோடு இமை கொண்ட சொந்தம் .
காலம் கடந்து செல்லும் ;
உறவுகளிடையே பாலம் போட்டுக் கொள்ளும்.
பாலம் உடைந்து போனால்,
மன பாரம் உயர்ந்து போகும்.
போரில் மீண்டு வந்தும்
மனப் போரில் மீளவில்லை;
மீட்டெடுக்க ஆளுமில்லை.
கருவறையில் உன்னோடு உறங்கிய நான்
கல்லறையிலும் உன் அருகில்
உறங்க வேண்டும் தாயே !
அங்கும் என்னோடு இணைவாய் நீயே !
எங்கும் இணைவோம் நாமே !

மேலும்

Krish - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2017 5:43 pm

விழியோடு விடை கேட்டு
விரைகின்ற நாட்களில்,
காற்றினில் கொடியாக
அசைந்திடும் நம் மனம்.
விதியோடு கை கோர்த்து
நொடிகளைக் கடக்கையில்,
சிறை பட்ட சிறகும்
கரை தொட்டு விரியும்.
கன்னியின் கண்களில் தோன்றிடும் அனலும்
உயிர் பறிக்கும் உன்னை எரித்து.
ஆண்களின் மௌனத்தில் புதை கொண்ட சிரிப்பும்
கழுத்தினில் பாம்பாய் உனைச் சுற்றி இருக்கும்.
கருவறை வாசம்
மறுமுறை காண்பாய்.
விஜயனாய் இருந்தும்
வேண்டி நீ தோற்பாய்.
நிஜம் அறியாமல்
கனவோடு கரைவாய்.
கண் திறந்தாலும்
இருளோடு உறைவாய்.
காதல் தந்த வல

மேலும்

காதல் என்ற சொல் உள்ளத்தை விடவும் கண்களின் கண்ணீரைத்தான் நேசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 9:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே