நல்ல டாக்டர்

டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ”
என்னப்பா ஆச்சு?

நடந்தா கூடவே வருது டாக்டர்!
எதுப்பா?
ஒடம்புதான் டாக்டர்
அப்படியா?
அப்புறம்
கண்ணு மூடுனா தூக்கமா வருது டாக்டர்
கண்ணு துறந்தா
பார்க்கறதெல்லாம் பளிச்சுன்னு தெரியுது டாக்டர்
அப்படியா? என்னை தெரியுதா?
நல்லாவே தெரியுது டாக்டர்
”சரி, யோசிக்க வேண்டிய விஷயம்தான்
”காலைல பத்து இட்லி சாப்பிட்டா கூட மத்தியானம்
ஒரு மணிக்கு பசி எடுக்குது டாக்டர்
பத்து இட்லி சாப்பிட்டுமா?
ஆமாம் டாக்டர் !
அட டே, விநோதமா இருக்கே
மத்தியாணம் இன்னா சாப்பிடுறீங்க
ஒரு வாழைஇலைல, சோறு, பொரியல் வறுவல், அப்பளம் ஊறுகாய் வைச்சு சாப்பிடுவேன்.
இவ்வளுவும் சாப்பிட்டு விட்டு என்ன செய்வீங்க?
”சாப்பிட்டவுடன் தூக்கம் வரும், தூங்கிடுவேன் டாக்டர்
எப்ப எழுந்திருப்பீங்க ?
சாயுங்காலம் ஒரு ஆறு மணிக்கு எழுந்திருச்சு ஒரு டிகிரி காப்பி சாப்பிட்டு, கூடவே நொறுக்கு தீனியா முறுக்கு, தட்டை இதெல்லாம் சாப்பிடுவேன்.
சாப்பிட்டுட்டு என்ன செய்வீங்க..
”தொலைக்காட்சியில ” சமையல் ரெசிபில்லாம் பார்ப்பேன் டாக்டர்”
பார்த்துட்டு என்ன பண்ணுவீங்க”
பார்த்த்தெல்லாம் செய்து கொடுன்னு மனைவிகிட்டே கேட்பேன்.
அவங்க செய்து கொடுப்பாங்களா?
”ஓ” செய்து கொடுப்பாங்க டாக்டர்.

வயசு என்ன ஆச்சு?
”ஐம்பத்தாறு” டாக்டர்
என்ன வேலை செய்றீங்க?
”டாக்டர், அப்ப, காலையில எழுந்திருக்கிறது, குளிக்கிறது, பல் தேய்க்கிறது, சாப்பிடுறது, தூங்கறது” இதெல்லாம் வேலையில்லையா டாக்டர்
”ஆமாம்..ஆமாம்.. அதெல்லாம் பெரிய வேலையாச்சே” கரெக்ட் நீங்க செய்யறது.
”குட், பேஷன்ட்ன்னா இப்படித்தான் இருக்கணும்”
”நீங்க ஒரு எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் இதெல்லாம் எடுக்கணும். கவுண்டர்ல ஒரு ஐயாயிரத்தைக் கட்டிடுங்க. மத்ததை ரிசல்ட் பார்த்த தும் என்ன வியாதின்னு சொல்லிடலாம்“
சரி டாக்டர்… வெளியே கிளம்பினார். பேஷன்ட்.
”நர்ஸ், அந்த பேஷன்ட்டோட முழு விவரத்தையும் சேகரிச்சு வைச்சுக்கோ”
”இனிமே அந்த பேஷன்ட்டுக்கு ”நாந்தான் ”பேமிலி டாக்டர்” என்றார்
”இதைக் கேட்டுக் கொண்டிருந்த பேஷன்ட்… ”இந்த ஏரியாவிலேயே..இவர்தான் நல்ல டாக்டர் என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு கிளம்பினார்.

கவீஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (23-Dec-17, 8:11 pm)
பார்வை : 357

மேலே