அடா இங்க வாடி
அடா இங்க வாடி. அடா எங்கடி போயிட்ட?
😊😊😊😊😊
யாரப் பாட்டிம்மா 'அடா'-ன்னு கூப்படறீங்க? 'இங்க வாடி' -ன்னும் சொல்லறீங்க. இந்த 'அடா' யாரு? பையனா? பொண்ணா?
😊😊😊😊😊😊😊
வாடி பொன்மணி. நல்லா இருக்கறயா?
😊😊😊😊😊😊
சரி யாரு இந்த அடா? அதைச் சொல்லுங்க பாட்டி முதல்ல.
😊😊😊😊😊😊
அட, 'அடா'வைப்பத்தித் தெரிஞ்சுக்க உனக்கு அவ்வளவு அவசரமா?
😊😊😊😊😊😊
ஆமாம் பாட்டிம்மா. சீக்கிரம் சொல்லுங்க. இல்லன்னா எந் தலையே வெடிச்சிடும்.
😊😊😊😊😊😊
அடியே பொன்மணி, 'அடா' எம் பேரன் முருகனோட பொண்ணு. குசராத்தில இருந்து வந்திருக்கறா. அவளத்தான் கூப்புட்டேன்.
😊😊😊😊😊
என்ன உங்க கொள்ளுப் பேத்திக்கு உங்க பேரன் 'அடா' -ன்னு பேரு வச்சிருக்காரு.
😊😊😊😊😊
அடியே பொன்மணி, திரைப்பட. ரசனையில முழுகி நம்ம தமிழ் சனங்க இந்திப் பேரை வைக்கறதத்தானே நாகரீகம்னு நெனைக்கறாங்க. தமிழ் நாட்டில இருக்கறவங்களே இந்திப் பெயர் மோகத்தில இருக்கறபோது குசராத்தில மாவட்ட ஆட்சியரா இருக்கற எம் பேரன் எப்பிடி தமிழ்ப் பேர தன்னோட மகளுக்கு வைப்பான்.
😊😊😊😊😊😊
நீங்க சொல்லறதும் சரிதான் பாட்டிம்மா. சரி 'அடா'-வுக்கு என்ன அர்த்தம்.
😊😊😊😊😊
அடா வருவா. அவகிட்டயே நீ கேட்டுத் தெரிஞ்சுக்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. திரை (கலப படத்) தமிழைத் தவிர்ப்போம்.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
படத்தில் இந்தி நடிகை
அடா ஷர்மா
Adah = adornment. (Hebrew, biblical origin)