பூந்தோட்டம்
பலவண்ணப் பூக்கள் பரவசம் கொடுக்கும்
பலவித வாசம் தன்வசம் இழுக்கும்
பலப்பலக் காட்சி சிந்தையில் அமரும்
படைத்தவன் மாட்சி கண்முன் தெரியும்
வண்டுகள் கூட்டம் வாசத்தில் மயங்கும்
தேனீக்கள் கூட பறந்திடத் தயங்கும்
பட்டாம் பூச்சிகள் பூவினுள் ஒன்றும்
பார்த்திட்டக் கண்கள் பார்க்காது வேறொன்றும்
ஒளிபடக் கருவி தொடந்து கண்சிமிட்டும்
பலியாகும் நேரம் சோகங்கள் மாறும்
பறிக்காதீர் பூக்களெனப் பலகைகள் தொங்கும்
பறித்ததேன் மனமெனக் கேட்பாரில்லை எங்கும்
அழகிய குடும்பமும் மகிழ்ச்சிப் பூந்தோட்டமே
அழகிய நாடும் இன்பப் பூந்தோட்டமே
அழகிய உலகும் இனியப் பூந்தோட்டமே
எல்லோரும் இன்புற வாழ்வினில் நாட்டமே
பூந்தோட்டம் போலவே இக்கவிக் குடும்பம்
பூக்களாய் பூத்திடும் கவிப்பாக்களோ ஆயிரம்
வேராகித் தாங்கிட அன்புள்ளோர் துணையுண்டு
தமிழன்னைத் துணைகொண்டு இடறின்றித் தொடருவோம்...