வாழ்க்கை

வாழ்க்கை ஆடுது சடுகுடு ஆட்டம்
மூச்சைப் பிடிக்குது பசியின் வாட்டம்
மானிடப் பிறப்புன்னா வரமுன்னு வந்தோம்
இதுவென்ன வாழ்க்கைன்னு வந்தப்பின் நொந்தோம்

நேற்றும் உணவில்லை இன்றும் உணவில்லை
நாளையும் கிடைக்குமென்று கொஞ்சமும் கனவில்லை
கூலி வேலைக்கும் கூப்பிட ஆளில்லை
வேலி போட்டுட்டார் சந்தோசத்தை தள்ளிவச்சு

பசிமட்டும் பத்திரம் வாழ்க்கையா சித்திரம்
புசித்திட ஒண்ணுமில்ல நாங்கஆனோம் விசித்திரம்
கசப்பாவே பொழுது வியப்பாவே மனசு
கண்ணீரா கனவு நிம்மதியில்லா நினைவு

ஆட்டிவைக்கும் புயலாத்தானே வாழ்க்கையிப்போ ஆச்சு
பூட்டிவைத்தும் நெஞ்சிலேனோ பூத்துருக்கு ஆச‌
வாட்டிவாட்டி வாட்டமாகி மனசுகொஞ்சம் மாறி
திருத்திடுவார் வாழ்வையென்ற நினைப்புதப்பா சாமி...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Dec-17, 8:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : vaazhkkai
பார்வை : 114

மேலே