இரட்டை நாக்கு
வாழ்க, ஒழிக வசனங்களுக்கு மட்டும் வசமாகிய இரட்டை நாக்கு..
காலையில் வாழ்கவென்றிடும் ஒரு நாக்கு,
மாலையில் ஒழிகவென்றிடும் மறு நாக்கு.
சத்தியமாய் சொல்கிறேன் இங்கு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது இரட்டை நாக்கு.
ஒருபக்கம் குற்றவாளி என்றிடும் ஒரு நாக்கு.
மறுபக்கம் நிரபராதி என்றிடும் மறு நாக்கு.
எந்த நாக்கு வெல்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்திடும் நாக்கு.
குற்றமிழைத்த நாக்கு தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமா?
பேசியதை இல்லையென்றிடும் நாக்கிற்கு,
ஆம், பேசினேன் என்றிட ஏன் தைரியமில்லை?
பதவிக்கும், பணத்திற்கும் அடிமையான நாக்கு.
காக்கா பிடிச்சே காலம் தள்ளும் நாக்கு..
உண்மையை உணரா ஊனமுள்ள நாக்கு..
தன்னைக் காக்கக் குலைத்திடும் நாக்கு.
வஞ்சகமாய் சூழ்ச்சியில் வென்றுவிட்டு தருமம் வென்றது என்கிறது நாக்கு.
நாங்களும் பார்க்கிறோம் இந்த நாக்கின் அவதாரங்களை..
இருதலைக்கொள்ளி மனிதர்களின் இரட்டை நாக்கு எத்தனை காலம் வென்றிடும் இந்த உலகை..
ஆன்டவனே! அழிக்க வந்தாலும் ஒன்றே சொல்வான், ஒன்றே செய்வான், அவனே உண்மையான மனிதன்..
நாக்கிலொன்றும் செயலிலொன்றும் கொண்டவருக்கெல்லாம் பொருந்திடும் இந்த இரட்டை நாக்கு...