முதிர்ச்சி

விதையாய் விழுந்த
ஆசை,
முளைத்து எழ
பொறுமை,
செடியாய் வளர்த்த
முயற்சி,
கனியாய் கனிந்தால்
சுகம்,
காயாய் உதிர்ந்தால்
துக்கம்,
விழுதாய் விளைந்தால்
தர்மத்தின் சக்கரம்,
வீணாய் போனால்
தர்மத்தின் எழுச்சி,
இரண்டையும் ஏற்றால்,
முதிர்ச்சி,
இல்லையானால்
அயற்சி.

எழுதியவர் : வெங்கடேஷ் (26-Dec-17, 9:16 am)
பார்வை : 88

மேலே