A FLASH MOMENT

சீதை என இவளைக்
கைப்பிடித்தேன்
காலையில் காபி தரும் போது
தாடகை அவதாரம்
எடுக்கிறாளே
முனிவ விசுவாமித்திர வெகுண்டு
முடித்துவிடு என்று சொல்லி விடாதே !
IT IS JUST A FLASH OF THE MOMENT !
மூன்று முடிச்சு இட்டு
நான் கைப்பிடித்த கவிதை அல்லவோ இவள் !
இதமாக இவள் பேசிட முனிவ நீ ஒரு
சுப்ர பாதம் பாடிடு !
வில்லாற்றல் மிக்க இராம இலக்குவர்களை
தாடகை வதத்திற்காக முனிவன் விசுவாமித்திரன்
கானகம் அழைத்துச் செல்கிறான்.
காலையில் இராமன் துயிலெழ முனிவன் பாடிய பாடல்
சுப்ரபாதம் .
கௌசல்யா சுப்ரஜா ராம ....என்று துவங்கும் அந்தப் பாடல்
இசைவாணி திருமதி எம் எஸ்ஸின் இனிய குரலால்
மிகவும் பிரபலமடைந்தது . நீங்கள் அறிவீர்கள்