காதல் சொல்லி நான்
உன் விரலிடை விரல்தனை
மெல்லவே நுழைத்து
மெல்லமாய் காதினுள்
காதல் சொல்லவே
செல்லமாய் முறைக்கிறாய்
ஓராயிரம் முறை ஆனதென கூறி...
இருந்தும் இன்னுமின்னும்
உன் மென் மூச்சில் கரைந்தே
உன்னுள் தொலைந்தே
பல ஓராயிரம் முறை
காதல் சொல்லவே
உன்னை வழிமறிக்கிறேன்
காதல் சொல்லியாய்...

