மெல்லிய திரை
மெல்லிய திரையொன்று
இடையினில் புகுந்திட
இடைவெளி இன்றியே
மனம் அதை எண்ணிட
விழிகளில் கண்டிடும்
காட்சிகள் பொய்யென
உள்மனம் காட்டிடும்
உருவமே மெய்யனே
புரிந்துமே புரிந்திடாமல்
திரையொன்று இடைப்புக
இடைவெளி இன்றியே
மனம் அதை எண்ணிட.
ஒளியென மின்னிடும்
உண்மைகள் தொலைவினில்
இதழ்களை விரித்து தான்
பற்களை காட்டிட
இருந்துமே பொய்களின்
ஆட்சிக்குள் துவண்டிட
மெய்மையை தேடியே
உள்ளம் களம் இறங்கிட
இன்னுமின்னும் திரைக்குள்ளே
பார்வை பாதை தேடிட
ஓடியே தேடியே
முயன்று தான் பார்க்கிறேன்
எத்தனை தூரம் இந்த
திரையும் தான் நீளுமென
இடைவெளி இன்றியே
ஆயுதம் வடிக்கிறேன்
எத்தனை திங்களுக்கு இந்த
திரையும் தான் வாழுமென...

