விட்டில்பூச்சி ஆனது வண்ணத்துபூச்சியாய்

வலம் வந்தேன் விட்டில் பூச்சியாய் - நீ
வளைத்ததால் ஆனேன்
வண்ணத்துப் பூச்சியாய் - உன்
நினைவுகளே - என்
வண்ணங்கள். - உன்னால்
நிறம் மாறினேன் - என்னை
நெருங்கி வந்தவளே - உன்னிடம்
நெருங்கிவிட்டேனா ? - நீயும்
நெருக்கத்தில் வந்தாயா? - காதல்
நமக்குள் புது வண்ணத்தை தீட்டுகிறது - அதில்
நீயும் நானும் புதிய எண்ணங்களை பதிப்போம்.
உனக்காக நானும் - எனக்காக நீயும்
நமக்காக புது உலகைப் படைப்போம்.- இந்த
விட்டில் பூச்சிக்கு
வெளிச்சம் இல்லாமல் இருந்தது - உன்னால்
வண்ணத்துப் பூச்சியாக மாறிய எனக்கு - இனி
வாட்டம் தரும் சோகம் கிடையாது.- நான்
சிறகடித்து பறந்து வந்தேன் உன்னை நாடி - நீயும்
சிலிர்த்து கைக்குள் ஏதுவாய் என்னை தான்டி
வண்ண உடையில் நீ வலம் வரும்போது - நானும்
வண்ணங்களை தீட்டிக் கொண்டேன். - உன்
வண்ண நிறைத்து மேனியுடன் உரசும்போது
வசந்த தென்றலின் சுவாசமாக ரசிக்கிறேன்.- உன்
இதழால் முத்தம் இடும்போது - பூக்களின்
மகரந்தத்தை சுவைத்தாற்போல் இனிக்கிறது.
சோலையைத் தேடித் பறப்பதைக் காட்டிலும் - உன்
சொந்தத்தை நாடி - என்
சிறகுகளை முறிக்கின்றேன். - இனி நான்
பறக்க மாட்டேன். - உன்னை விட்டும்
பிரியமாட்டேன்.

எழுதியவர் : சங்கு chandramoulee (28-Dec-17, 7:05 am)
பார்வை : 53

மேலே