என் கண்ணே

விண்மீனே! விண்மீனே!
நீ தான் என்
பெண்மானே!
சொன்னேனே! சொன்னேனே!
என் காதல்
நீதானே!
நீரில்லாமல் நிலமா!
நிலவில்லாமல் வானமா!
கனவில்லாமல் இமையா!
காதல் இல்லாமல் என்னுள்
நீயா!
கடலை நெருங்கும் கரையே!
நிலவில் தோன்றும் பிறையே!
காற்றால் தோன்றும் மழையே!
கரைந்தேன் உன்னுள் இப்பனியே!
தென்றலாய் பேசும்
தேவதை நீ!
தேனாய் உன்னை ருசிக்கும்
தேமகன் நான்!
சுனாமியாய் என் காதல்
உன்னை -சுவைத்திடுமடி
என் கண்மணியே!
கரைந்தோடும் காற்றாய்
நீ சிரித்தாள்!
கவிபாடும் ஆற்றல்
நான் மறப்பேன்!
மழையாக என்னுள்
நீ விழுந்தால்
புவியாக நானும்
மண்ணாவேன்!
சுடர் ஒளியிலே
உன் முகம்
சிலையாய் ஆனது
என் மனம்!
நீ! சிரித்து சிரித்து
பேசினால்
சிதைந்து போகுது
என் மனம் !
நீ! ஓடி ஓடி
போனால்
உடைந்து போகுது
என் குணம் !
விண்மீனாய்
நீ இருந்தால்
விதையாக நான் கிடப்பேன்!
பெண்மானாய்
நீ சிரித்தாள்
பேயாக உருவெடுப்பேன் !
உன் கண்விழியில்
கரைந்தோடும் என்னை
கலை உணர்வோடு
காண்பாய் பெண்ணே!

எழுதியவர் : பெரியகவுண்டர் (28-Dec-17, 4:44 am)
சேர்த்தது : PERIYAGOUNDAR
Tanglish : en kanne
பார்வை : 210

மேலே