அகலாமல் போச்சு

அமிர்தி மலை
அருவியில்
மூலிகைகள்
குளித்த நீரில்
மூழ்கி மூழ்கி
குளித்தார்கள்
குதித்து குதித்து
களித்தார்கள்
உடம்பு
அழுக்கெல்லாம்
நீரோடு போச்சு
மனசு
அழுக்கெல்லாம்
வெளியில்
அகலாமல் போச்சு.

எழுதியவர் : ந க துறைவன். (28-Dec-17, 10:00 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 56

மேலே