சோகம் பின்பே சுகம்
சாகும் போது சோகம் வேண்டாம்
வாழும் போது வழங்கி வாழ்வோம்
மனம் ஓடும் பணம் தேடி
பணம் நிறைந்தால் சோகம் போடி
வீழ்ந்து தோற்றால் வீரனுக்கு ஏன் சோகம்
எழுந்து ஜெய்த்தால் ஜொலிக்கும் அவன் தேகம்
ஏழையின் வீட்டில் எந்நாளும் சோகம்
மழலையின் சிரிப்பில் மறையும் யாவும்
காக்கை ஓடும்நெல் சாக்கை நாடி
கற்கள் பாயும் காகம் தேடி
அழையா விருந்தினர் சோதனைக் கற்கள்
அலண்ட காகம் பறக்கும் மைல்கள்
சோகம் நிறைந்த காகம் நினைப்பில்
பாவம் தீர்க்கப் பாவி அழைப்பில்
மாண்டு போன மனித மனமோ
வேண்டிப் போகும் காகம் தேடி
சோகம் வேண்டாம் காகம் உனக்கு
அழைத்து அளிப்பான் அன்ன விருந்து
பாவம் மறைய சாதம் விருந்து
காகம் கரையும் சோகம் மறந்து
சோதனைத் துளிகளே சாதனை வெள்ளம்
வேதனை நினைத்து வீழ்ந்து விடாதே