ஏலேலோ ஐலசா கிராமிய பாடல்
அலையிங்கு நடனமாடி ஏலேலோ
குளிர்தென்றல் முத்தமிட ஐலசா//
கடலில் செல்ல ஏலேலோ காதல் கொள்வோம் ஐலசா//
கடலை நம்பி ஏலேலோ நான் போராட
ஐலசா//
போராட்டம் இன்றி ஏலேலோ வாழ்க்கையும் ஓடிட ஐலசா//
என்னை நம்பி
ஏலேலோ பிள்ளை இருக்கு ஐலசா//
சுழல் காற்றில் ஏலேலோ கடல்
தத்தளிக்க ஐலசா//
ரத்த நாளங்களில் ஏலேலோ ஏக்கம்
நீள்கிறது ஐலசா //
கண் பார்த்து ஏலேலோ
கடல்தாயே சொல்லு ஐலசா//
என்னை காணவில்லையே என ஏலேலோ
மனைவியும் புலம்புவாள் ஐலசா//
ஏழையின் வாழ்வு ஏலேலோ
இருட்டினில் போகிறதே ஐலசா//
வயிற்றை நிரப்ப ஏலேலோ//
உன்னிடத்தில் வந்தேன் ஐலசா//
பாசம் இன்றியே ஏலேலோ//
உயிரைச் சிதைக்கிறாய் ஐலசா