மன்னிப்பாயா

காதலில் மன்னிப்பு நன்றி
இல்லை என்று சொல்வதுண்டு
அதையும் மீறி நான்
நேற்று மன்னிப்பொன்று கேட்டுவிட்டேன்..
அதற்கான இன்று மன்னிப்பாயா?

ஆகா.. இன்றொரு மன்னிப்பும் சேர்ந்துகொண்டது
அதனையும் சேர்த்து நாளை மன்னிப்பாயா?

மன்னித்தல் இல்லை எனில்
குறையின்றி காதலி..
மனமதுவும் இசைந்து விட்டால்
தவறென்ன காதலி..
கன்னித்தமிழ் சொல் எடுத்து
கவிதருவேன் காதலி..
இன்பமான காதல் கொண்டு
காவியம் ப‌டைக்க காதலி....

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 6:11 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : mannippaayaa
பார்வை : 122

மேலே