புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2018

பழையன கழிந்திட புதியன புகுந்திட
புதிய ஆண்டொன்று பூத்ததய்யா!
பழகிய ஆண்டுக்கு விடை கொடுப்போம்
புதிய ஆண்டினை வரவேற்போம்!
தீங்குகள் நினைத்தோரை மனதால் மன்னிப்போம்
நாமே அதுவெனில் மாறிடுவோம்
அடைந்த துன்பங்கள் நீரில் வரைவோம்
பெற்ற வெற்றிகள் ஆழப்பதிவோம்
அனைவரும் வெற்றி பெற வேண்டிடுவோம்
துணிச்சலாய் பேதங்கள் தகர்த்திடுவோம்
இனிவரும் காலங்கள் ஏற்றம் கொள்வோம்
துணைவரும் நம்பிக்கை ஜெயித்திடுவோம்
இனிமைகள் சேர்த்திடட்டும் புதிய ஆண்டு
இனியில்லை கண்ணீரென சிரித்திடுவோம்
இன்பமே கொடுக்கட்டும் புதிய ஆண்டு
முதல்தினம் மகிழ்வாய் துவக்கிடுவோம்