சட்டம் யார் கையில்

உழைக்கின்ற உழைப்பிற்கு
சோர்க்கூட இல்லாமல்
சோர்ந்து விழுகையிலும்
தனக்கென்று வாழாமல்
தாழ்ந்து போகின்றோர் கை தவிர
சட்டம் சரியாக வேலைச் செய்யும்

கேள்வி கேட்க்க நாதி இன்றி
நாடோடியாக போகின்ற
நாளுப்பேர் கை தவிர
சட்டம் சரியாக வேலை செய்யும்

பணம், பதவி
இருக்கின்ற பொருட்டு
சாட்சியம், சட்டமும்
சரியாக வேலை செய்யும்

உரிமை இருந்தும்
உண்மை இருந்தும்
எதுவும் இயலாது -ஏனெனில்
உண்மை கை தவிர
சட்டம் சரியாக வேலை செய்யும்

சட்டம்,
இருப்பவர் கையில் இருக்கிறது
இல்லாதவரை பார்த்து முறைகிறது

சட்டம்,
யாருக்காக வகுக்கப்பட்டதோ
அவர்களின் கை தவிர
சரியாக வேலை செய்கிறது

எழுதியவர் : பா விஷ்ணு (29-Dec-17, 1:02 pm)
சேர்த்தது : பா விஷ்ணு
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 174

மேலே