சட்டம் யார் கையில்

இலங்கை தமிழரை ஆயுதம் கொண்டு தாக்கும்போது
அமைதி காக்கும் ராணுவ சட்டமும்!
காசு கொடுத்து அகிம்சை தண்டனை
பெறும் அரசியல் சட்டமும்!
நீட் (NEET) தேர்ச்சி பெற்றோரெல்லாம்
உயிர் காக்கும் மருத்துவராக தகுதி கொண்டவர்
என்று கூறும் மருத்துவ வியாபார சட்டமும்!
58 வருட உழைப்பின் பயனாய்
கிட்டும் பென்ஷன் கூட இழந்து நிற்கும்
உழைப்பாளி சட்டமும்!
தேர்தலுக்கு முன்பு மட்டும்
சாலை வடிவைக்கும்
சீரமைப்பு சட்டமும்!
அரசு வேலைக்கும் இடை வியாபாரி
கொண்ட நம் அரசியலமைப்பு சட்டமும்!
பிஞ்சு பெண் பூக்களை கசக்கி
எறியத்துடிக்கும் காம முதலைகளை
மன்னித்து விடும் நீதிமன்ற சட்டமும்!
மக்களால்
மக்களுக்காக
நடத்தப்படும் மக்களாட்சி சட்டம் யார் கையில்
.
.
.
.
எனக்குள்ளும் வினாவாகத்தான் இருக்கிறது????

எழுதியவர் : (29-Dec-17, 2:04 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 121

மேலே