கிடைக்குமா
கடற்கரை அருகினிலே
ஓலை குடிசைதனிலே
விறகடிப்பினில் மண்
பானைதனில் பொங்கி
வீசும் இதமான தென்றலின்
சுகத்தோடு நிலச்சோறு
உண்ணும் சுகம்.......
மாடி வீட்டினிலே
வாயு அடுப்புதனில்
குக்கரில் பொங்கி
ஏசிக் காத்தினிலே
வீட்டுக் கூரையைப்
பார்த்து உண்பதில்
கிடைக்குமா??????????