புத்தாண்டே வருக
சோகம் களைந்து
புன்னகை மலர ..
சோதனை எல்லாம்
சுகமாய் மாற ..
பேதங்கள் மறைந்து
ஒற்றுமை மலர ...
குரோதம் நீங்கி
பாசமழை பொழிய ...
ஏழ்மை கொஞ்சமேனும்
விலகிச்செல்ல...
வரவுகள் வசந்தமாக்கிட
செலவுகள் குறைந்திட ...
மாணவர்க்கு கல்வி
இனிப்பாய் மாறி
தேர்வுகள் எல்லாம்
தேர்ச்சிபெற்றிட ...
போராட்ட வாழ்வுக்கு
விடை கிடைத்திட ..
தோல்விகள் மறைந்து
வெற்றி பெற்றிட ..
ஆணவம் அகன்று
பண்புடைமை வளர்ந்து
எல்லா மனங்களும்
நிம்மதி பெற்றிட
புத்தாண்டே வருக ...