புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2018

முடிவில் துவங்கும்
முழுநீள ஆண்டே
மலரும் வருடம்
மகிழ்வின் ஊற்றாய்
வண்ணக் கோலமாய்
வளங்கள் கூட்டுக
வாழ்க்கைச் சிறந்திட
வாய்ப்புகள் தருக
இன்னல்கள் சுருக்கி
இணைப்புகள் பெருக்கி
ஏற்றம் நல்கும்
எண்ணங்கள் சேர்க்க
ஆரோக்கியம் பொங்க
ஆசி புரிக
மனிதம் போற்றும்
மனங்கள் கொண்ட
சாதிகள் மரித்திடும்
சமூகம் படைத்திட
நம்பிக்கையின் விடியளாய்
நாளை விடிய
புன்னகை ததும்ப
புத்தாண்டே வருக
வரங்கள் தருக
வளர்க வாழ்க
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்