சட்டம் பணம் கையில்
"அச்சமில்லை அச்சமில்லை ......"
முண்டாசு கவி பாடினான்
அன்று....!
"அச்சமில்லை அச்சமில்லை ....!"
மூர்க்கர்கள் பாடுகிறார்கள்
இன்று...!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
பழமொழி...!
சட்டம் குற்றவாளிகளை
இறந்த பின்பும் கொல்லாது
புதுமொழி...!
அறத்தினை காக்க
அச்சிட்டான் காந்தியை - எம்
பாட்டன் ...!
இன்றோ...!
அரக்கனை காக்க
அலைகிறான் பெட்டிகளில் - எம்
அண்ணல் காந்தி...!
சட்டம்
இந்தியாவில் நாணலாய் வளைகிறது
தமிழ்நாட்டில் தங்கமாய் உருகுகிறது
"கரண்சி நோட்டில்
கானல் நீராய் கரைகிறது-எம்
சட்டம் "