புத்தாண்டை வரவேற்போம் என்றாய்
புன்னகையை புத்தக வரிகளில் வைக்க
பேனாவை எடுத்தேன் ...
புத்தாண்டு எதிர் வந்து நின்றது !
புத்தாண்டை வரவேற்க வரிகளை
நான் யோசித்தேன்...
பூவிழியாள் நீ எதிர் வந்து நின்றாய் !
பூவிழி உனக்கு கவிதை எழுத நினைத்தேன்
போதும் எழுதியது கைகோர்த்து கடற்கரையோரம் நடப்போம்
புத்தாண்டை வரவேற்போம் என்றாய் !
---இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அன்புடன் கவின் சாரலன்.