உலக வாழ்க்கை

பகட்டில் வாழும் மனித வாழ்க்கைப் பாருங்கள் அகக்கண்களாலே...
எல்லாம் பகட்டு.
எதிலும் பகட்டு.

காதலும் பகட்டு,
அன்பும் பகட்டு,
நட்பும் பகட்டு,
பாசமும் பகட்டு.

பாழும் உலகில் பாவியென்று என்னை கடவுள் சாபத்தோடு படைத்ததே விளையாட்டு. உச்சரிக்கும் என் வார்த்தைகள் இந்த பகட்டுவாதிகளுக்கு முரண்பாடு..
சுயம் இழக்கவில்லை நான்...
சுயநலம் கொண்டிருக்கவில்லை நான்...

யார் வெறுத்தாலும் உண்மையின் வழி நின்று உரைப்பேன் அன்பின் மாண்பு..
யார் விட்டு பிரிந்தாலும் உடல் கூலி என் உழைப்பில் கிடைக்குமேயன்றி பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனக்கு..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Jan-18, 6:29 pm)
Tanglish : ulaga vaazhkkai
பார்வை : 847

மேலே