வேம்பின் வீம்பு

அது ஒரு வளர்ந்த, முதிர்ந்த, சடைத்த வேப்பமரம். நாட்டு வைத்தியர் வேலுப்பிள்ளையின் பாட்டனர் ஊர் விதானையாராக இருந்த கணபதிபிள்ளை பாதையோரமாக இருந்த தன் வீட்டு வாசலில் நட்ட மரம். அது வளர்ந்து நிழல் கொடுக்கத் தொடங்கியதுவழிப்போக்கர்கள் சுமந்து செல்லும் சுமைகளை வைத்து சற்று இளபாறிப் போக ஒரு சுமைதாங்கியை தன் சொந்த செலவில்வேலுப்பிள்ளையர் அமைத்தார். . . சுமைதாங்கி. அருகே உள்ள கிணறு வழிப்போக்கர்களின் தாகத்தை தீர்த்தது .வேம்பு, சுமைதாங்கி,, கிணறு ஆகிய இந்த மூன்றும், அப்பாதை வழியே போவோருக்கு சமூக சேவை செய்தன . காலப் போக்கில்சுமைதாங்கியும், கிணறும் மறைந்தன வேம்பு மட்டும் தனித்து நின்று சேவை செய்தது வேம்புக்கு நூறு வயதுக்கு மேல் இருக்கும். .

****

மத்தியானப் போசனத்தை வயிறுமுட்ட உண்டபின் வேப்பமரத்தின் நிழலில் இருந்த கயிற்றுக்கட்டிலில்தலையணையுடன் வந்தமர்ந்தார் நாட்டு வைத்தியர் வேலுப்பிள்ளை. அவர் கொடுக்கும் மருந்துகள் வேப்பங்காயைப்போல் கசப்பதினால் அவரை அவ்வூர்வாசிகள் “வேம்பு வைத்தியர்” என்றுதான் அழைப்பார்கள். வேலுப்பிள்ளை என்றபெயர் மறைந்து நாளடைவில் அவருக்கு வேம்பர் என்ற பெயர்தான் நிலைத்தது. நல்ல காலம் வம்பர் என்ற பெயராக மாறவில்லை. அவர் வீட்டில் தினமும் வேப்பம் பூ வடகம்
இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் இல்லாத நாளில்லை.. வேப்ப எண்ணெய் மருத்து பாவிக்கப்படுகின்றது.

****

அந்த மரத்தின் இலையை, குடல் புழுக்களைக் கொல்வதற்றகும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கவும் வேலுப்பிள்ளையர் பாவித்தார் .
வேம்பு எண்ணெய், பித்த நீரை அதிகரிக்கும்; இசிவு நோயைக் குணமாக்கும்; காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். எனப்பார் வேலுப்பிள்ளையர்
சுமார் 15 மீ. வரை உயரமாக வளர்ந்தமரம்..அதில் வரும்
. வேப்பம் பழங்ளை, பறவைகள் அணில்கள் சுவைக்க அம்மரத்துக்கு வருவதுண்டு
சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் வேப்ப எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் கொண்டுவர, தலைமுடி உதிர்தலும், தலைப்பேன், பொடுகுத் தொல்லையும், இளநரையும் கட்டுப்படும்.
படை, சிரங்கு குணமாக வேப்ப இலைகளிலிருந்து தயாரித்த பசையை உறங்கும் முன் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிமறுநாள் காலையில் கழுவ வேண்டும். அல்லது வேம்பு மரப்பட்டையைக் காயவைத்து எரிக்க வேண்டும். எரிந்தசாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து களிம்பு தயார் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும், பாதிக்கப்பட்டஇடங்களில், குணமாகும் வரை பசையைத் தடவிவர வேண்டும்.
பத்து கொழுந்து வேப்பம் இலைகள் எடுத்துக் கொண்டு, நான்கு வாரங்களுக்குத் தினமும் காலையில் சாப்பிட்டு வர, தோல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறும்.
மாதவிடாய் முறையாக இல்லாத பெண்கள் ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த சூடான பானத்தைக்குணமாகும்வரை, ஒரு கோப்பையளவு, காலை, மதியம் மற்றும் மாலையில் பருக வேண்டும்.
வேம்பு இலைகள் மற்றும் வேரின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்தும் திறன் உயர்நிலைமருத்துவ ஆய்வுகள் மூலமாக நிருபிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் குணமாக ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த சூடான பானத்தை, ஒரு கோப்பை அளவு பருகிவரலாம். காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் மூன்று நாட்களுக்குக் குடிக்க வேண்டும்.
வேப்பிலையுடன், மஞ்சள், அருகம்புல், பச்சரிசி, பாசிப்பயிறு இவைகளை ஒன்றாக அரைத்து,



கட்டிலில் நீட்டி நிமிர்ந்து அண்ணார்ந்தவாறு படுத்துதார் வேம்பர். காற்றில் வேப்பமரம் கல கல வென்று சிரித்தது.

ஏன் சிரிக்கிறாய் ? அதட்டிக்கேட்டார் வேம்பர்

“உனக்கும் எனக்கும் என்ன பெயர் பொருத்தம் பார்த்தாயா?” மரம் அவரைப்பார்த்து கேட்டது.

“அதற்கு இப்ப என்ன?”

“ என்னைப் பற்றி உனக்கு கொஞ்சம் சொல்லப் போகிறேன் கவனமாய் கேள். என் பெருமை உனக்கும் பெருமை தான்”

“ சரி சொல்லு கேட்கிறேன்”

“சிந்து சமவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் எனது இலையும் ஒன்றாகும். வேப்பிலை இயற்கைஅளித்த முதல் தமிழனின் மூலிகை மருந்து ஆகும் என்பதை முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. வேம்பை பராசக்தியின் மூலிகை என்று சித்தர்கள் பெயரிட்டனர். அகஸ்தியர் கூட தனது பரிபூரணம் 400 என்ற நூலில்என்னை குறிப்பிட்டுள்ளார். அதனால் சக்திக்கு திருவிழாவெடுக்கும் போது கரக ஆட்டத்தில் எனக்கு முக்கிய இடம்கொடுக்கிறார்கள். அம்மன் கோயில், காளி கோயில் இருக்குமிடமெல்லாம் என்னைத் தல விருட்சமாக காணலாம். பொதுவாக என்னை வீட்டுக்கு முன் புறத்திலும் முருங்கைமரத்தை வீட்டுக்கு பின் புறத்திலும் வளர்ப்பது தான் நம்நாட்டின் வழக்கம். வேப்பமரத்தால் சுகாதார கெடுதிகளும் முருங்கை மரத்தால் பசிப்பிணிகளும் வராமல் தடுக்கலாம்என்பது முன்னோர் கருத்தாகும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தொற்று நோய்களை கொண்டுவராமல் பாதுகாப்பதற்கேஎன்னை காவலனாகப் பயன் படுத்துகிறார்கள். பொதுவாக என்னைப் பார்ப்தாலும், என் அடியில் அமர்வதனாலும்என்மேல் பட்டு வரும் காற்று மனோவியாதிகள் உள்ளவர்கள் மேல் பட்டாலும் மனம் அமைதியாகும். மனோவிகாரங்கள்சாந்தமாகும்.

“அது சரி உனக்கும் கிரகங்களுக்கும் என்ன சம்பந்தம்.?”

“நான் நவக்கிரகத்தில் கேதுபகவானுக்குப் ப்ரியமானவள். ஜாதகத்தில் கேது தசாபுத்திகள், கோச்சரங்களில் கெடுதல்தரும் காலஙகளில் எனக்கு மஞ்சள் குங்குமமிட்டு , 9 தினங்களுக்கு காலை மாலை கற்பூரம் தீபாராதனைசெய்து வழிபடகேதுபகவான் கிருபையால் கெடுதல் பலன் சாந்தியாகும். என் மரத்தின் சமூலத்தை சமமாக எடுத்து தூள் செய்து தேனில்அரைத்து நெற்றியில் திலகமிட்டுவர மிருகங்கள் வசியமாகும் என்கிறது நமது நாட்டு சாஸ்திரங்கள்.”

“ பல காலமாக உனது மகிமை இருந்து வருகிறதா?”

“2500 ஆண்டுகட்கு முன்னரே தமிழகத்தில் வேப்பிலை மருந்துவம் எல்லா நோய்கட்கும் தீர்வளிக்கும் முதல் மூலிகைமருந்தாகப் பயனாகி வருவதை இன்றைய பழக்கத்தின் மூலமாகவும் அறியலாம்.

“ முலிகையா?. நான் கொடுக்கும் குளுமையைவிடவா சிறந்தது?”

“ஆமாம். தமிழ் குக்கிராமங்களில் இன்றும் கூட குழந்தை பிறந்தால் 9வது நாளிலிருந்து வேம்புத்துளிர் இலைகளை 3 எடுத்து சீரகம் 5, மிளகு 2 தூள் செய்து அதனை ஒரு சிறு துணியில் முடிந்து தாய்ப்பாலில் தோய்த்து ஊறியபின் 5 சொட்டுகள் பாலில் கலந்து வாரம் 2 நாள் புகட்டுவார்கள். வேப்பங்காரம் என்று இந்த சிகிச்சைக்கு பெயர். Immune Drops என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இந்த வேப்பங்காரம் குழந்தை உடம்பில் நோய் எதிர்ப்பாற்றலைஊக்குவித்து உடம்பில் தொற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.”

“வேப்பம் மரத்துக்கும் தொற்று நோயுக்கும் என்ன தொடர்பு?”

“அம்மை , பொக்களிப்பான் போன்ற தொற்று நோய்கள் வந்தால் தலையணையில் வேப்பம் இலையைத்தான்வைப்பார்கள். அதுவுமல்லாமல் வீட்டு வாசல் படியில் கூட வேப்பம் இலையைக் கட்டி விடுவார்கள். வேப்பங்காரம்சாப்பிட்ட குழந்தைகள் போலியோ, டைபாய்டு மற்றும் மலேரியா காய்ச்சல், சர்மநோய் போன்ற தீவிர நேர் வராமல்திடகாத்திரமாக வளர்ந்தன. நாடு விடுதலை அடைந்தவுடன் அரசாங்கமும் மக்களும் மூலிகை மருத்துவத்தைமூடநம்பிக்கையான பச்சிலை மருத்துவம் என ஒதுக்கிவிட்டனர். அதனால் இந்த வேப்பங்காரம் எனும் எதிர்ப்பு மருந்து (Immune Drops) கைவிடப்பட்டது. அதன் விளைவாக போலியோ, டைபாய்டு, சர்மநோய்கள் பெருகின.

இன்றைய இளம் தாய்மார்கட்கு வேப்பங்காரம் எனும் எதிர்ப்பு மருந்து (Immune Drops) பற்றிய அறிவு அறவே கிடையாது. பிறந்த குழந்தைஎதனால் அழுகிறது? என்ன கொடுக்க வேண்டும்? எப்படி? எப்போது? எவ்வளவு கொடுக்கவேண்டும்? என்று அனுபவ அறிவுகிடைக்காததால் சளியா? சலதோஷமா? காய்ச்சலா? அஜீரணமா?, மலச்சிக்கலா? ஓடு! ஓடு! டாக்டரிடம் தேடி! என்பதேஅன்றாடப் பழக்கமாகி விட்டது. அதன் விளைவு மளிகை கடை பில்களை விட குழந்தைகள் மருத்துவ பில் இரண்டு மூன்றுமடங்கு அதிகம். போதாக் குறைக்க பக்க விளைவுகளால் disable ஆகி, வளரும் போதே நோயாளிக்குழந்தை எனப்பட்டப் பெயர் பெருகின்றது.

“இப்படி அலோபதி மருந்துகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க என்ன வழி? என்று இளம் தாய்மார்கள் குழம்பித்தவிக்கின்றனர். அதற்கு உன் பதில் என்ன?”

“இவர்களுக்கு ஒரு நல்ல வழி கூறுகிறேன். "வேப்பங்காரம்" வாரம் 2 நாட்கள். பிறந்த குழந்தையாக இருந்தால் 3 வேப்பந்துளிர், சீரகம் 5, மிளகு 2 தூள்செய்து தாய்ப்பாலிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து புகட்டுங்கள். ஓராண்டு முதல்5 ஆண்டு வரையிலான குழந்தைகட்கு 10 வேப்பந்துளிர் ஒரு சிட்டிகை சீரகம், மிளகு 10 தூள் செய்து தேன்கலந்து வாரம் 1 நாள் நாவில் தடவி விடுங்கள். வேப்பங்காரம்' குழந்தையை நோயின்றி ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

சிந்து சமவெளி தொடங்கி, நம் மூதாதையர் வரை பயன்படுத்தி நலமுடன் வாழ்ந்து வர உதவிய இந்த வேப்பங்காரம்சொட்டு பற்றி மேனாட்டவர் இன்றும் அறியவில்லை. எப்படியோ 5000 ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாறு கொண்டுள்ளவேம்பு மருத்துவம்

“ அதோ பார் உன் கிளையொன்று முறிந்து கிடப்பதை”

“ வேப்பங் குச்சியை ஆலம் விழுது போல் பல் துலக்க பாவிப்பார்கள். என்னை பற்பசை தயாரிக்கக் கூட பாவிப்பதுண்டு. ஒரு காலத்தில் வேப்பங்குச்சியால் பல் துலக்கியவர்களின் பற்கள் என்பது வயதிலும் ஆடாது நோயில்லாமல் இருக்கும்”

“அவ்வளவுக்கு நீ மானிடர்களுக்கு உதவிசெய்கிறாயா?

“என்னில் இருந்து பயன் பெற்ற அவர்கள் செய்நன்றி மறந்து என்னை வெட்டி எடுத்து தளபாடங்கள் செய்கிறார்கள். “

“ உண்மைதான். ஆனால தச்சு வேலை செய்பவர்கள் பிழைப்புக்காக செய்கிறார்கள். சிலர் உன் பூவைக்கூட விட்டுவைப்பதில்லை. எனக்கு உன் பூவிலிருந்து செய்த வேப்பம் பூ வடகம் என்றால் நல்ல விருப்பம்”

“ ஏன் பூவை மாத்திரம் சொல்லுகிறாய். வேப்பெண்ணை கூட உடம்புக்கு நல்லது தான். நீ விளக்க வெளிச்சத்தில் படிக்கும்போது வேப்பெண்ணெயில் திரியை எரிய விடு. அது உண் கண்களுக்கு நல்லது”

“ உன் உடம்பெல்லாம் மூலிகை நிறம்பி இருக்கிறது போல இருக்கு”

“அது தான் இயற்கையன்னை எனக்குத் தந்த வரப்பிரசாதம்.”

“சரி சரி எனக்குத் தூக்கம் வருகிறது. எந்த கெட்ட காற்றும் என்னைத் தீண்டாத வாறு எனக்கு காவல் இருப்பாயா?”

“நிட்சயமாக. பிறருக்குப் பணி செய்வதே என் விருப்பம்”

“அதோ உன்னைத் தேடி வேப்பிலை வயித்தியத்துக்காக வந்திருக்கிறார்கள் அவர்களை போய் கவனி.” வேப்பமரம்விடைபெற்றது.

*****
சூழலில் ஏற்பட்ட மாற்றத்தால் கிராமத்தை ஒரு பெரும் புயல் தாக்கும் என ஊர்வாசிகள் எதிர்பார்க்கவில்லை. பலமரங்கள் வேரோடு சரிந்தன . அதில் பாதையோரம் இருந்து பலருக்கு பயன் கொடுத்த வேலுப்பிள்ளையின் வேப்ப மரமும் ஓன்று . சில நாட்களில் அது இருந்த இடம் தெரியாது போய்விட்டது. பாதை பெரிதாக்கப் பட்டது. வேலுப்பிள்ளையரும்இடம் பெயர்ந்தார் .
*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் -கனடா (3-Jan-18, 7:43 am)
பார்வை : 322

மேலே