கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கனவுகளைத் தேடிச் செல்லும்
உன்னை,
நான் நம்
நினைவுகளோடு பயணித்துப்
பின்தொடர்கிறேன்.

தேடிய கனவுகளைக்
கண்டுகொண்ட மகிழ்வோடு..
உன் அடுத்த கனவினை
என் கண்களுள் தேடக்
காத்திருக்கிறேன்...

- செ.பொன்நிலா

எழுதியவர் : செ. பொன்நிலா (3-Jan-18, 4:37 pm)
பார்வை : 2184

மேலே