எழுத்தாளருக்குப் பாராட்டுகள்

(எண்சீர் விருத்தம்)

படைப்பு தாண்டியதே பதினாறை நண்பா
தடையே உமக்கில்லைத் தலைப்பைத்தேர்ந் தெடுக்க
படைப்பில் நிறுத்தினாய் எம்பாரதியை எடையில்
இடையில் மரணமௌனம் சிந்தனைப்பூ என்றாய்
சடையிட்ட வாழ்க்கைச்சமு கநிகழ்வும் நேரமும்
நடைகாண் போராட்ட நாயகர்இந் தியனும்
உடையிட் டாய்மூலர் உவமைஇலக் கியத்தில்
கடையில் காட்டினாய் மனிதருடன் விளக்கை


----ராஜப் பழம் நீ
4th jan ௨௦௧௮
என் உடன் இளங்கலை வகுப்பில் பயின்றவர் முனைவர்
பு.சி. ரத்தினம் அவர்கள் அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் சுமார் 20 நூல்களுக்குமேல் மண்மேகலை பிரசுர பதிப்பகத்தின் . மூலமாக வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய அனைத்து நூல்களிலும் எனக்கு ஒரு பிரதியை அனுப்பிப் படிக்கச் செய்வார். அந்த நன்றியின் வெளிப்பாடாக மேலேயுள்ளக் கவிதையை அவரைப்பாராட்டி எழுதி இங்கு கௌரவிக் கிறேன். தயவுசெய்து உங்கள் அனுமதியையும் வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
ராஜப் பழம் நீ.

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jan-18, 5:06 pm)
பார்வை : 96

மேலே