இன்றைய மனிதன்

இமைக்கும் இமைகள்
இயற்கையை மறந்தது
துடிக்கும் இதயமும்
கருணையை இழந்தது

மாசு என்பது மனிதன் படைத்தது
மாசு மனித மூளையை வென்றது
சுத்த காற்றை சுவாசிக்க மறந்தான்
சுற்றுச்சூழலை நேசிக்க மறந்தான்

கல்வி கற்றும் கடமையை மறந்தான்
கற்ற கல்வியை கனவில் மறந்தான்
தீய மயக்கம் மனதில் முளைத்தது
மனித நேயம் மறந்தே போனது

காதலிக்க ஆசை வந்தது
கனவு காதல் நேரில் வந்தது
கண்ணை மூடி காதலில் விழுந்தான்
கருவில் சுமந்த தாயை மறந்தான்

எழுதியவர் : அஸ்வந்த் (6-Jan-18, 6:57 pm)
Tanglish : indraiya manithan
பார்வை : 256

மேலே