நீயே நான்
மெட்டெடுத்து நான் பாட
ஆதியாய் நீ நின்றாய்
வரிகள் வடிவில் உன் உருவம் தந்தாய்!
ழகர அழகில்
மழலை வாசித்தாய்
மறுகணம் உன் மடி விழுந்தேன்!
மௌன மொழியில்
எதுகை விரித்தாய்
மோனை யானேன் உன்னிடத்தில்!
உவமைகள் பல வீசினேன்
அதிலும்
உருவகமாய் நீ மட்டுமே!
காதல் பொழிந்தேன்
அதிலும்
நாணத்தை சிந்தினாய்!
என்செய்வேன் தமிழே!
உன்னை தொழுவதை தவிர
வேறென் செய்வேன்!!
- மூ.முத்துச்செல்வி