காதல்- மயக்கும் உந்தன் பார்வை
பார்த்த முதல் பார்வையிலேயே
உன் பார்வை என்னை ஒரு மனதாய்
உன்னிடம் சரணடைய வைத்ததன்
மாயம்தான் என்னவோ இன்றுவரை
நானறியேன் ஒரு வேளை பார்த்த
அத்தருணத்திலேயே என்னை நீ
மயக்கிவிட்டாயோ நானறியேன்
ஆனால் ஒன்று மட்டும் நான்
நன்கறிவேன் அதுதான் உந்தன்
காந்தப் பார்வை கடல் நீரை
ஓங்கி எழும் பெரும் அலையாய்
தன்வசம் இழுக்கும் திங்களின்
புவி ஈர்ப்புக்கு ஒக்கும்; அது கண்ணன்
வேய்குழலுக்கு மதிமயங்கி அவன்
காலடியில் கிடந்து தவம் கிடைக்கும்
பசுக்கள் ஒப்ப என்னை உன்னிடம் ஈர்த்துவிட்டது
உன்னைவிட்டு எப்போதும் போகாது
எந்தன் உடலும் உயிரும், அப்படி போனாலும்,
உன்னுடலில் உன் உயிரோடு கலந்திடும்
பேதை எந்தன் உயிர்.

