கன்னித்தமிழும் கத்துக்குட்டியும்

கன்னித்தமிழ் நீ
கத்துக்குட்டி நான்
லெமூரியா மலர் நீ
தும்பி நான்
வல்லினம் நீ
மெல்லினம் நான்
இடையினமாய் நம் காதல்!!
வலி மிகும், மிகா இடம் நீ
ஒற்று பிழை நான்
உன்னை நீங்கினில்
சுற்றும் பிழை தான்
இலக்கணம் நீ
இலக்கியம் நான்
இலக்கணம் இல்லையேல்
இலக்கியம் ஏது??
அணிகலன் நீ
அளபெடை நான்
உயிர் நீ
மெய் நான்
உயிர் இல்லையேல்
மெய் சடலமே!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (8-Jan-18, 6:12 pm)
பார்வை : 230

மேலே