பாடும் நிலா பாலு - ஜூன் 4
![](https://eluthu.com/images/loading.gif)
சத்தத்தினால் சகாப்தம் படைத்து
அகிலம் ஆள ஆண்டவன்
படைத்திட்ட அதிசயம்
பாடும் நிலா பாலு...
வெற்றிடத்தையும் ஊடுருவும்
இவருடைய ஒலி!!!
பல நூறு கவிதைகள்
இவர் குரலால் உயிர் பெற்றிருக்கின்றன...
எளிமை, பணிவு, அன்பு
இவரின் செல்வங்கள்...
கோபம், பொய், தற்பெருமை
இவர் இழந்த செல்வங்கள்...
அதனால்தான் விருதுகள்
இவர் வீட்டை
விரிவுபடுத்திக்கொண்டிருக்கின்றன...
உலகநாயனுக்கான
தெழுங்குக்குரல் இவர்தான்...
இசை தெய்வத்தின் இளையபிள்ளை...
இளையராஜாவின் நட்பு எல்லை...
தன் முதல் பாடலில் "ஆயிரம் நிலவே வா"
என்ற இவரது ஆசை
இன்று 40,000 பாடல் நிலவுகளை
இவருக்கு பரிசளித்துள்ளது...
இந்த தேய்பிறை இல்லாத
இளைய நிலாவிற்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எழுத்து,
ஜெகன். G