தூக்கியெறிவர் விரைவுடனே

​வீரனில்லா புரவியொன்று
--வீரநடை போடுதிங்கு ​
சூரனில்லா கோட்டையின்று
--சூழ்ச்சியில் சிக்கியதிங்கு !

மண்டியிட போட்டியிட்டு
--மண்ணில் உருள்கிறது
மதியிழந்த மாண்புமிகுகள்
​--​மத்தியில் மானமிழந்து !

முகம்தெரியா மூடர்கூட்டம்
--முந்திடும் நிலையிங்கு
முண்டியடித்து வந்தாலும்
--முதல்வரிசை தமிழருக்கே !

இலையுதிர் காலம்வரும்
--இருளகன்று ஒளிபிறக்கும்
அரித்திடும் கரையான்களும்
--அழிந்திடும் கதிரொளிபட்டு !

கனவுலகில் மிதக்கின்றனர்
--காவிகளும் நடிகர்களும்
தூண்டலிடும் வேடதாரிகளும்
--தூக்கியெறிவர் விரைவுடனே !

( இது படத்தை பார்த்து எழுந்த கற்பனையே )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Jan-18, 10:25 pm)
பார்வை : 1646

மேலே