இரண்டு சொற்கள்
இரண்டு சொற்கள்
==================================ருத்ரா
அர்த்தம் கேட்டவர்களை
அர்த்தமில்லாமல்
அலைய வைக்கும்.
வலிக்கிறதே
என்று சொன்னால்
வலிக்கிறதைத்தேடித்தானே
அலைகிறாய்
என்று கேட்கும்.
அது
காதல்.
கடவுள்.
எனும் இரண்டு சொற்கள்.
===============================