தமிழை ஆண்டாள் -கட்டுரை கவிஞர் வைரமுத்து--------------ஆண்டாள் விவகாரம் ----- செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு

‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டது.





வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:

* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?

* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று. ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார்.

பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி. இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவை தெரியாது..

திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல் கொண்டாள்.

நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு. இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.

*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.

*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா?

*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எழுதியவர் : (12-Jan-18, 4:53 pm)
பார்வை : 347

சிறந்த கட்டுரைகள்

மேலே