கம்பன் மறந்த காதல் வரிகள்

எல்லோரும் பேனாவிற்கு
மை நிரப்பி
எழுதுவார்கள் - நானோ
உன் ஞாபகத்தை
நிரப்பிதான் எழுதுகிறேன்
இந்த கவிதையை..!!
நீ ரசித்தாய்
கற்சிலை கூட வெட்கப்பட்டது
நீ சிரித்தாய்
பிறந்துவிட்டது எட்டாவது ஸ்வரம்
நீ பட்டு உடுத்தினாய்
பட்டுப்பூச்சி எல்லாம் பட்டுப்போய்விட்டது
உன் அழகைப் பார்த்து
நீ நகம் கடித்தாய்
விழுந்துவிட்டது குட்டி பிறைநிலா
நீ கீழே விழுந்தாய்
ஒன்பது கிரகங்களும் அதிர்ந்துவிட்டது
நீ என்னை சாய்ந்து பார்த்தாய்
இந்த பூமியோ மேலும்
23.5டிகிரி சாய்ந்துவிட்டது
நீ இனிப்பு உண்டாய்
யாரையும் கடிக்காத பிள்ளையார்
எறும்பு கூட இனிப்புடன் சேர்த்து
உன்னையும் கடித்துவிட்டது -என்
மனம் எனோ வலித்துவிட்டது
நீ கொழுத்தி விட்ட
அழகால் தானோ என்னவோ
இப்படி கொசுவத்தி புகையைச்சுற்றி
வட்டம் போட்டு விளையாடுகிறது
என் வீட்டு கொசுக்கள் எல்லாம்..!!!
நீ பார்க்கும்
அழகால் தானோ என்னவோ
இப்படி தன்னையே மறந்து
உன்னையே பார்க்கின்றன
கோயில் தெய்வங்கள் எல்லாம்!!!
நீ உறிட்டிப் போட்ட
அழகால் தானோ என்னவோ
இப்படி கொதிப்பதை விட்டுவிட்டு
குதித்து குதித்து விளையாடுகிறது
எண்ணையில் உள்ள
பலகாரங்கள் எல்லாம்..!!!
நீ கோலம் போட்ட
அழகால் தானோ என்னவோ
இப்படி துள்ளி விளையாடுகின்றன
என் வீட்டு கோலத்து
புள்ளிகள் எல்லாம்..!!
நீ துவைத்து போட்ட
அழகால் தானோ என்னவோ
இப்படி றெக்ககை கட்டி பறக்கிறது
என் சட்டைகள் எல்லாம்..!!
நீ பேசுகின்ற
அழகால் தானோ என்னவோ
மொழிகள் எல்லாவற்றிலும்
தமிழ் தன் சிறப்பை விடுவதில்லை.!!
நீ குளிக்கின்ற
அழகால் தானோ என்னவோ
குற்றால அருவி குதித்து குதித்து
ஓடோடி வருகிறது
உன் அழகைப் பார்க்க..!!!
நீ என் கவிதையை படிக்கும் பொழுதெல்லாம்
என் பேனா மை'யில்
மல்லிகைப் பூ வாசம்
வீச தொடங்குகிறது..!!!
நீ எதையும் அழகாகச் செய்வதில்லை,
நீ செய்வதெல்லாம் அழகாக இருக்கின்றன!!!