காதல் மயக்கம்
குங்குமப் பொட்டு வைத்த
..... குலமகள் பெண்ணாம்; அந்த
நங்கையை நினைத்து உள்ளம்
..... நாணலாய் ஆடு திங்கே
கங்கையைப் போல - வற்றாக்
..... காவிரிப் போல; நெஞ்சில்
பொங்கிடும் இன்பம் யாவும்
..... பொன்மயில் அவளால் தானே
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்