தேன் விருந்து

கந்தக விசையைப் போல
..... காதலால் ஈர்த்தாய் - என்னை
சொந்தமாய் கட்டி யணைத்து
..... தோளுடன் ஒட்டிக் கொண்டாய்
செந்நிற இளநீர் மற்றும்
..... தேனுடன் கலந்த பாலும்
சந்தன வாயால் நீயும்
..... தந்திட மகிழ்ந்தேன் நானே

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (14-Jan-18, 5:30 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : thaen virunthu
பார்வை : 63

மேலே