கண்கள் அல்ல காந்தம்

கண்ணிலே காத லோவியம் வரைந்து
..... கவர்ந்திடும் பெண்ணாவள்
கண்டபின் மயங்கிக் காதலில் விழுந்தேன்
..... கன்னியின் அழகினிலே
எண்ணமோர் கோடி மனத்திலே தோன்றும்
..... இவள்முகம் நினைத்தாலே
பண்ணிலே காதல் கவிதைகள் புனைவேன்
..... பைந்தமிழ்ச் சொல்லெடுத்தே

ஆக்கம்;- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (14-Jan-18, 5:31 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 69

மேலே