நீளாதோ இவ்விரவு

மோகனப் புன்ன கையும்
..... முகப்பொலி வோடும் மங்கை
தாகமும் தீர்த்து வைத்தாள்
..... சாகசம் புரிந்து; என்னை
மோகநூல் படிக்க வைத்தாள்
..... மோகன அழகி; என்றன்
தேகமும் மெத்தை யாகும்
..... தேவதை உறக்கம் கொள்ள!

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (14-Jan-18, 5:34 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 75

மேலே