பச்சை வயல் பாதையிலே
கமழ்மலர்கள் வாசம் வீசி
..... கவிர்ந்திழுக்கும் பாதை யோரம்
இமைக்காத கண்க ளோடு
..... என்னவளும் நடந்து வந்தால்
இமைநோக அவளைப் பார்த்து
..... என்கண்கள் இன்பம் கொள்ளும்
உமிழ்நீரும் வெள்ள மாகி
..... உதட்டோரம் வழிந்து செல்லும்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்