இராப்பத்து பதிகம் - பதிகம் 9

பதிகம் 9

முடிகோதி மடிபுரள்க
சுருண்ட கூந்தலில் சுருண்டவனே
சுருண்ட மனத்தை நீவிவிடு
உன் சொற்கள் மயில்பீலி ஆகட்டும்.

அவனை விட்டல்ல
அவனைப் புறந்தள்ளி அல்ல
அவனை விடவும் மேலான
அன்பு , அரவணைப்பு
ஆறுதல் , தேறுதல்
தேடுதல் , கூடுதல்
நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன்.

வாழ்வைப் பணையம் வைத்து வருகிறேன்
அற்ப சுகம் என்று சொல்லேன்
ஆனந்த லாகிரி
பேரானந்தப் பெருஞ்சுகம்.
உன்னில் உள்ளதென்று நம்பி
ஒப்படைக்கிறேன்.

கூடுதல் தவிர
எந்த நிபந்தனையும் என்னிடமில்லை.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (16-Jan-18, 8:16 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 53

மேலே