இராப்பத்து பதிகம் - பதிகம் 10

பதிகம் 10

கள்ளத்தனமல்ல.
நல்லதென்று நம்பியது
வெம்பிய , கூம்பிய
விளங்காத நிலையில்.

இல்லறம் வெறுத்து
துறவறம் எதற்கு?

ஆசாபாசங்களை அவிழ்த்தெறிந்துவிட்டு
ஆடைகள் எதற்கு?
ஒப்பனை எதற்கு?

நாம் ஏமாற்றவில்லை.
நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.

வா !
நாம் மாற்றுவோம் !
கேட்டுக்கொள் கவனமாய் ;
மறுபடியோர் ஏமாற்றத்துக்கு
நான் தயாராயில்லை.
வேண்டாம்.

வேண்டும் வா !

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (16-Jan-18, 8:17 pm)
பார்வை : 54

மேலே