சில்லுகள்

இங்கே சனநாயகம்
ஒரு வழுக்கு மரம்...
மாற்றமென்பது
மரத்தின் உச்சாணி கொம்பில்,
எட்டுவதற்குள்
வழுக்கி விடுகிறது
கையூட்டு...
வழுக்கி விழுபவன்
வாக்காளன்...
***************
தூக்கம் தொலைந்த
என் திண்ணை இரவுகளில்
தூக்கணாங்குருவி கூட்டின்
மின்மினி பூச்சிகளே
வெளிச்சமிடும்,
மின்மினி பூச்சிகளின்
வெளிச்சத்தை விழுங்கிவிட்டு,
கூடுகளை தூக்கிலிட்டு
இப்போது
"செல்"அரித்து கொண்டிருக்கிறது
என் தூக்கத்தையும்,
தூக்கணாங்குருவிகளையும்....
******************
"செல்" அழித்த குருவிகள்
வீடு திரும்பாதென்பதை
அறியாது
செல்லரித்த கூடுகள்...
******************

எழுதியவர் : பனவை பாலா (16-Jan-18, 10:47 pm)
சேர்த்தது : பனவை பாலா
Tanglish : sillugal
பார்வை : 168

மேலே