காதலால்

கரையை முத்தமிட்ட
அலையை ரசித்தேன்

உனக்காக
காத்திருந்த நேரத்தில்

காதல் என்னை
ரசிகனாக்கியது

நண்பனிடம் பொய்
சொல்லிவிட்டேன்

உனக்காக
காத்திருந்த நேரத்தில்

காதல் என்னை
பொய்யனாக்கியது

கற்பனையில்
மிதந்தேன்

உனக்காக
காத்திருந்த நேரத்தில்

காதல் என்னை
கவிஞனாக்கியது

கடந்து போன
காலங்கள் ஊடே

கைகூடுமென்ற
நினைத்த காதல்

முறிந்த நேரத்தில்

காதல் என்னை
பித்தனாக்கியது

நிற்காமல் ஓடிய
காலத்தின் பின்னே

காதலால் வந்த
அத்தனையும்

காணாது போனது

காதல் மட்டும்
என்னுள் இன்னும்

உலாவருகிறது
உன் உருவில்
நா.சே..,

எழுதியவர் : Sekar N (17-Jan-18, 11:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaathalaal
பார்வை : 135

மேலே