போர்களத்தில் நான்

முட்களின் கீறல், இயற்கையின் முத்தம்...
தினமும் எனக்கு கிடைத்திடும் மொத்தம்...
கணக்கிட முடியுமோ இயற்கை அன்பின் அந்தம்?
கடைசிவரை மூச்சுக் காற்றே சொந்தம்...

ஆரம்பமானேன் அன்னையிடம்...
இனி ஆண்டு அனுபவித்து மாண்டு மடிவது அன்னையிடம்...
தண்ணீர் ஊற்றி வளர்த்து மனிதன் இளநீர் கேட்பது தென்னையிடம்...
தென்னையால் இளநீர் தர இயலாது போனால் அனுப்பி வைப்பான் அன்னையிடம்...

நீதி நீதி என்றே கோடியாய் கோடியாய் நிதியில் புரளும் நீதி,
பாமர மக்களுக்கு எங்கே கிடைக்கும் நீதி,
எல்லாரும் செல்வோமா விதியென்ற கடைவீதி,
வாழ்க்கை கழியுதே நாட்டின் எல்லையில் மரண பீதியில்...

பீதியிலே எதிரியை வதை, அல்லது நீ வதைக்கப்படுவாய் என்ற போர் விதியிலே யுத்தகளத்தில் ஒரு சதிராட்டம்,
ஆட்டம் முடியுமா,
யுத்தகளம் நீங்கினால் போதுமா,
சரணடைய உன் மடி வேண்டுமே இயற்கை அம்மா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Jan-18, 7:37 pm)
பார்வை : 1118

மேலே